கோவிட் பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதித்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.