பச்சையாக வெங்காயம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

யாரெல்லாம் தங்களுடைய தினசரி நிறைய காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கனோ அவர்கள் நாள்பட்ட நோய்கள் பலவற்றில் இருந்தும் விடுபட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

காய்கறிகள் உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கின்றன.

அதில் மிக முக்கியமானது வெங்காயம்.

வெங்காயத்தில் மிக அதிக அளவில் பிளவனாய்டுகள் இருக்கின்றன.

இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகின்றன. அதேபோல வெங்காயத்தில் உள்ள தியோசல்ஃபினேட்டுகள் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருப்பதுடன் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகிய ஆபத்துக்களில் இருந்து தடுக்கிறது.

ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆற்றலைத் தரும். உடல் பருமனைக் குறைக்கும் போன்ற பல காரணங்களால் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறோம். க்ரீன் டீ குடிக்கிறோம்.

ஆனால் நம்முடைய வீட்டில் எப்போதும் இருக்கும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டாலே அதில் இவை எல்லாவற்றையும் விட அதிகமாக ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன என்பது தெரியாமல் இருக்கிறோம். சொல்லப்போனால் வெவ்வேறு வகையான 25 க்கும் மேற்பட்ட பிளவனாய்டு ஆன்டி-ஆக்சிடணட்டுகள் வெங்காயத்தில் இருக்கின்றன.

அமெரிக்க வேளாண்மைத் துறையின் ஆய்வின்படி, ஒரு வெங்காயத்தில் மட்டும் கிட்டதட்ட 25 மைக்ரோகிராம் அளவுக்கு கால்சியம் சத்து நிறைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கால்சியம் எலும்புகளை வலுவாககுவதில் அதிக பங்கு வகிக்கிறது.

அதனால் உங்களுடைய தினசரி உணவோடு வெங்காயத்தை சாலட்டாக எடுத்துக் கொள்வது நல்லது. ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகளின் அளவுகளை அதிகரிக்கச் செய்யவும் எலும்புகள் சேதமாகாமல் தடுக்கவும் வெங்காயத்தில் உள்ள கால்சியம் உதவுகிறது.

அதோடு ஆஸ்டியோபொராசிஸ் என்னும் எலும்பு புரை நோய் வராமலும் எலும்பின் அடர்த்தி குறையாமலும் தடுக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சருமத் திட்டுக்களைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகின்ற சரும பாதிப்புகளைத் தடுக்கிறது.

வைட்டமின் சி அதிகமுள்ள ஓர் உணவு தான் வெங்காயம்.

கொலாஜன் உற்பத்தியை நிர்வகிப்பவும் உற்பத்தி செய்யவும் வெங்காயம் உதவியாக இருக்கிறது. அதனால் தலைமுடி மற்றும் சருமத்துக்கு நல்ல பொலிவைத் தருகிறது. வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவதோடு அதன் சாறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து வர, தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

எனவே பச்சை வெங்காயத்தினை உணவில் தினமும் சேர்த்து கொண்டு கிடைக்கும் பலன்கள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.