அசைவத்தை தவிர்த்து சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள் அன்றாட உணவு பழக்கத்தில் ஐந்து விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
அசைவத்தை தவிர்த்து சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்கள் அன்றாட உணவு பழக்கத்தில் ஐந்து விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அவை எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெறுவதற்கு வழிவகுக்கும்.
1. உலர் பழங்கள்: பெரும்பாலான உலர் பழங்களில் இரும்புதான் முக்கிய ஊட்டச்சத்தாக அமைந்திருக்கிறது. மேலும் அவற்றுள் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளன. எனவே உலர் பழங்களை தினமும் குறிப்பிட்ட அளவாவது அவசியம் சாப்பிட வேண்டும். சாலட்டிலோ, சிற்றுண்டியிலோ சேர்த்து ருசிக்கலாம்.
2. பச்சை இலை காய்கறிகள்: இதிலும் இரும்பு சத்து நிரம்பி இருக்கிறது. வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியமும் அதிகம் உள்ளது. கீரைகளில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
3. முழு தானியங்கள்: துத்தநாகம், நார்ச்சத்து இவை இரண்டும் முழு தானியங்களில் அதிகம் நிரம்பி இருக்கும். இவை உடலில் கொழுப்பு சேர்வதை எதிர்த்து போராடவும் உதவும். பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.
4. பருப்பு: கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் இவை இரண்டும் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படும். அதுபோல் இரும்பு சத்தும் அதிகம் கொண்டிருக்கும். இவற்றை சாப்பிடுவது வாயு பிரச்சினையை உருவாக்காது.
5. பீன்ஸ்: இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் அதிகம் கொண்ட இது உடலில் கொழுப்பை எதிர்த்து போராட உதவும். அத்துடன் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் பீன்ஸ் மூலம் பெறலாம்.