வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

கோடை காலத்தில் அதிக வெப்ப நிலை இருக்கும் என்பதால் உடலுக்கு அதிக தண்ணீர் சத்து தேவைப்படும். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தண்ணீர் குடிக்கலாம் என்றாலும், சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைய தண்ணீர் உள்ளது அவற்றை சாப்பிடுவது நீர் சத்துடன், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும். வெள்ளரியும் இவற்றில் ஒன்று. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.

மேலும், தினமும் வெள்ளரி சாப்பிடுவதால் 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும். வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் உள்ளது என்பதோடு அது நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வெள்ளரிக்காய் ஆரோக்கிய நன்மைகள், மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது, அழகை கூட்டுவதிலும் பயன்படுகிறது.

நீரிழப்பைத் நோய் வரமால் தடுக்கும் : வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது வேண்டுமானால் வெட்டி உப்பு தூவி சாப்பிடலாம். வெள்ளரிக்காயை சாண்ட்விச்சில் சேர்த்தும் சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால், முழுமையாக சாப்பிடுவதால், ஊட்டச்சத்து பண்புகளின் பலனையும் பெறுவீர்கள். வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர் இருப்பதால், நீர் இழப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

புற்றுநோயை வருவதை தடுக்கிறது : வெள்ளரிக்காயில் உள்ள புரோட்டீன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை நம் உடலுக்குத் தருவதுடன், புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இது புற்றுநோய் செல்களில் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது, எனவே இதனால், புற்றுநோய் எதிர்ப்பு பழம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

செரிமான அமைப்பைச் சீராக வைத்திருக்க உதவும்: வெள்ளரிக்காயில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து நமது உடலின் செரிமான செயல்முறையை சீர் செய்கிறது. வாயு, மலச்சிக்கல் அல்லது வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஒரு கிளாஸ் வெள்ளரி சாறு உங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.

வாய் துர்நாற்றம் முற்றிலும் விலகும் : வெள்ளரிக்காயை சிறிது நேரம் வாயில் வைத்து மென்று சாப்பிட்டால் சுவாசம் புத்துணர்ச்சி அடைவதுடன் வாய் துர்நாற்றம் விலகும். வெள்ளரியை மெல்லுவதன் மூலம், வாயிலிருந்து வரும் துர்நாற்றம் முற்றிலும் விலகும். ஏனெனில் இது துர்நாற்றத்தை பரப்பும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.

முகம் பொலிவாக இருக்கும் : வெள்ளரிக்காய் அழகை அதிகரிக்கவும் பயன்படுகிறது. முகத்தின் கருமையை, வெள்ளரிக்காய் பேக் போடுவதன் மூலம் அதை நீக்கலாம். இது சருமத்தை பொலிவாக்கி, முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும். இது நமது சருமத்திற்கு டோனிங்காக செயல்படுகிறது.