நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இதனிடையே தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவராக தற்போது உருவாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்நிலையில், பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே ரூ. 3.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். இது இதுவரை வாங்கிய சம்பளத்தை விட அதிகமான சம்பளம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.