பேரீச்சம் பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை உள்ளன. தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.
எலும்புகள் :
தினமும் பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் பலம் பெறும். இதில், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் ஆகியவை உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தும்.
மாரடைப்பு பாதிப்பை குறைக்கும் :
குளிர்காலத்தில் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்த அபாயத்தை தடுக்கும்.
ஆற்றல் தருபவை :
தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர உடலுக்கு ஆற்றலை தரும். மந்தமாகவும், சோர்வாகவும் இருக்கும் போது பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர உடனடியாக ஆற்றல் கிடைக்கும்.
இரும்புச்சத்து :
ரத்த சோகை உள்ள பெண்கள் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.