தினமும் வெறும் வயிற்றில் மிளகுத் தூளில் ஒரு சொட்டு தேன் கலந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
அதைப் படித்து தெரிந்து இன்றில் இருந்து நீங்களும் சாப்பிட ஆரம்பியுங்கள்.
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்குமானால் தேனில் 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். மிளகுத் தூளும், தேனும், சளியை திறம்பட கரைத்து வெளியேற்றும்.
சளியின் காரணமாக அஜீரண கோளாறால் அவதிப்பட்டு வந்தால், மிளகுத் தூளை தேனுடன் உட்கொள்ளுங்கள். இதனால் வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிளகில் உள்ள நற்பண்புகள் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதில் சிறந்தது.
அதற்கு மிளகை தேனுடன் மட்டுமின்றி, பால், சமையல், மிளகு டீ என்று எந்த வடிவிலும் உட்கொள்ளலாம்.
மிளகில் உள்ள உட்பொருட்கள் தீவிரமான நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் கொண்டவை.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை மிளகு குறைக்க உதவும்.
இதய நோய்களின் அபாயம் குறையும். அதற்கு மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.
ஒருவர் மன இறுக்கத்தில் இருந்தால், அதில் இருந்து விடுபட தினமும் மிளகை தேனுடன் சாப்பிட்டு வாருங்கள்.