டக் அவுட் ஆகி விராட் கோலி செய்த மோசமான சாதனை..

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டக் அவுட்டாகி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் இந்திய இளம் வீரர்கள் அசத்திய நிலையில் சீனியர் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினர்.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் 3 போட்டிகளிலும் ரன் குவிக்க தவறினர். அதிலும் கோலி 3 போட்டிகளிலும் 8,18, 0 என்ற கணக்கில் ரன் எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் முதல் முறையாக சாதாரண வீரராக விளையாடிய விராட் கோலி சதம் அடிப்பார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2015க்கு பின் முதல்முறையாக ஒரு ஒருநாள் தொடரில் அரை சதத்தை அடிக்க முடியாமல் விராட் கோலி திண்டாடியுள்ளார்.

அதேபோல் 3வது போட்டியில் டக் அவுட்டான அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான 4வது இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின்(20 முறை), யுவராஜ் சிங் (18 முறை), கங்குலி(16 முறை), விராட் கோலி (15 முறை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3 பேட்டிங் இடத்தில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரராகியுள்ளார்.

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், கோலி 2வது இடத்திலும், சேவாக் 3வது இடத்திலும் உள்ளனர்.