விமான பணிப்பெண்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

ஏர் இந்தியா டாடா விமான நிறுவனம் பயணிகள் விமானங்களில் விரைவாக ஏறுவதற்கும், இருக்கையில் அமர பணிபெண்களுக்கு உதவும் வகையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஏர் இந்தியா டாடா சன்ஸ் பிரைவேட் விமான நிறுவனம் ஆனது தாமதம் இன்றி இயக்குவதற்காக பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

அதன்படி பயணிகள் விமானங்களில் ஏறும்போது பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் சாப்பிடுவதோ அல்லது பானங்கள் அருந்துவதோ கூடாது. பாதுகாப்பு சுங்கம் சோதனைகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்க மேக்கப் போடக்கூடாது.

அதிக நகைகளை அணியக்கூடாது என கூறப்பட்டுள்ளது,. மேலும், பயணிகள் விமானங்களில் விரைவாக ஏறுவதற்கும், இருக்கையில் அமருவதற்கும் பணிப்பெண்கள் உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கவுண்டர்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கூடாது. சோதனைகளை விரைவாக முடிக்கவேண்டும். எந்த காரணத்துக்காகவும் பயணிகள் விமானத்தில் ஏறுவதை தாமதப்படுத்தக்கூடாது.

சரியான நேரத்தில் ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் விமானத்துக்கு செல்ல வேண்டும். எந்தவொரு நடவடிக்கையின் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.