நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கூறியுள்ள சம்பவம் இன்னும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதன் தீர்வு தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
18 ஆண்டு திருமண வாழ்க்கையை கடந்த மாதத்தில் பிரித்துக்கொண்ட இந்த தம்பதிகளின் பிரிவிற்கு தற்போது வரை காரணம் என்ன என்று தெரியவில்லை.
ஆனால் குறித்த பிரச்சினை குறித்து அவ்வப்போது அதிகமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றது. ஆம் ரஜினிகாந்தில் இளைய மகள் சவுந்தர்யா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் கணவரை பிரிந்து பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டது யாவரும் அறிந்ததே.
தற்போது சவுந்தர்யா, ஐஸ்வர்யா இருவரும் ஒரே நேரத்தில் தனது கணவரை பிரிவதாகவும், விவாகரத்து செய்யப்போவதாகவும் தனது தந்தையுடன் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் ஐஸ்வர்யா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த், மகன்களுக்காக தனுஷுடன் வாழுமாறு 6 வருடங்களுக்கு முன்பே சமாதானம் செய்துள்ளாராம்.
அப்பா சொன்னதால் மனதை மாற்றிக் கொண்டாலும் ஐஸ்வர்யா சந்தோஷமாக இல்லாமலும், அடிக்கடி தனுஷுடன் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதாம்.
வழக்கம் போல் பிரச்சினை ஏற்படும் போது, அதனை சமாளிக்க தனுஷ் புதிய படத்திற்கு கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு பல ஆண்டுகள் இருந்த பிரச்சினை தற்போது பெரிதாகியதுடன் வெடித்து இருவரும் பிரிந்துள்ளார்களாம்.
ஐஸ்வர்யாவுடன் இனி சேர்ந்த வாழ விரும்பாத தனுஷ் தனது முடிவில் எந்தவொரு மாற்றம் இல்லை என்று யாரும் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.