காலை உணவை தவிர்ப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகள் தெரியுமா?

இன்றைய தலைமுறையினர் அநேகர் காலை உணவினை தவிர்த்து வருகின்றனர். அவ்வாற தவிர்ப்பது என்னென்ன ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

காலை உணவு, அன்றைய நாளுக்கான ஆற்றலைத் தரும். பசியின்மைப் பிரச்சினை இருப்பவர்கள், காலையில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
காலை உணவை நேரம் கழித்துச் சாப்பிட்டால், உடலின் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படக்கூடும்.
மேலும் கெட்ட கொழுப்பு அதிகரித்து இதயப்பிரச்னைகள் ஏற்படலாம். சரியான நேரத்திற்குச் சாப்பிட்டால் இவற்றினைத் தவிர்க்கலாம்.
காலை உணவு, மூளையின் செயல்பாடுகளை அதிகளவு தூண்டும்.
உடல் எடை சீராகும். பருமனமாக இருப்பவர்களுக்கு, உடை குறையத் தொடங்கும். மனம் அமைதியடைந்து, கவனச்சிதறல் நீங்கும்.
காலை உணவைச் சரியான நேரத்திற்குச் சாப்பிட்டா், பக்கவாதம் போன்ற பல நோய்களைத் தவிர்ப்பதுடன், குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கமுடியும்.