தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணமான பிரபலம் யார் தெரியுமா?

நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீது கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்துள்ளனர், இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சி அடைந்தது.

இருந்தாலும், இவர்களை பேசி சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்கள் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐஸ்வர்யா பிள்ளைகளின் நலனை கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாமல், திடீரென இந்த விவாகரத்து முடிவை எடுத்தது நடிகர் ரஜினியை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

குடும்பத்தின் மீது ரஜினிக்கு இருக்கும் கோபம் இன்னும் தணியவில்லை என்று கூறப்படுகிறது.

சமூகவலைத்தளங்களில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினியின் மனைவி லதா, அனிருத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல இசையமைப்பாளர் அனிருத், லதாவின் நெருங்கிய உறவினராவார். அனிருத் ஐஸ்வர்யா மீது காட்டிய நெருக்கம் தான் இவர்கள் பிரிவிற்கு ஒரு முக்கியமான காரணம் என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அதன் காரணமாக அனிருத்தின் மீது கோபத்தில் இருக்கிறாராம் லதா.

மேலும், அனிருத்தும் தனுஷும் நெருங்கி பழகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் பல நடிகைகளுடன் நெருங்கி பழகியதால் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.

எனவே, இதற்கு முக்கிய காரணம் அனிருத்தான் என்று கருதி லதா ரஜினிகாந்த் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.