பிக்பாஸ் வீட்டில் காதல் முறிவை நினைத்து வருந்தும் அபிராமி

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்களிள் ஒருவர் நிரூப். இவர் நடிகை யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் பிக் பாஸ் போட்டியிலேயே யாஷிகாவை பற்றி பேசியிருக்கிறார்.

இருவரும் பின்பு சில கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டோம் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து, தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கிறார் நிரூப்.

அல்டிமேட்டில் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான அபிராமியை காதலித்துள்ளார் நிரூப். அதன்பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இன்றைக்கான ப்ரோமோ நிகழ்ச்சியில், இது நம்ம ஆளு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில், இந்த வீட்டில் இருக்ககூடாது என்பவர்களுக்கு நோ பார்க்கிங் போர்டை வழங்கலாம் கொடுத்துள்ளனர்.

அப்போது அபிராமி நிரூப்புக்கு கொடுத்துள்ளார். அதன் பின்னர் நாடக கலைஞன் சினேகன் வந்து, ஓவர் பில்ட்பாக தோற்ற காதலை நினைத்துக்கொண்டே இருப்போம்.

தன்னை மறக்க புது புது வேஷம் போடும் என அபிராமி காதல் முறிவு சோகத்தை ப்ற்றி பேச உடனே அபிராமி எழுந்து வந்து கட்டிப்பிடித்து அழுதுள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.