அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துதுள்ளார்.
பிரபல நடிகரும், முன்னாள் அரசியல்வாதியுமான அமரர் விஜயகுமாரதுங்கவின் நினைவு தின நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தற்பொழுது நாட்டில் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
தற்காலிக அடிப்படையிலான தீர்வுகளினால் பயன் ஏற்படப் போவதில்லை. தற்போதைய அரசாங்கம் நீண்ட கால அடிப்படையிலான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தவறியுள்ளது என ஜீவன்குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.