ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் மகா சண்டி யாகம்

உலக நன்மை வேண்டி ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் மகா சண்டியாகம் நடந்தது.மேலும், தம்பதியினர் பூஜை, சுமங்கலி பூஜை, கன்னி பூஜைகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் டி.புதுப்பட்டி சக்திபுரத்திலுள்ள ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி பீடத்தில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மகா சண்டியாக கால பூஜை நடைபெற்றது.

மாசிமாத பவுர்ணமியை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆகாய வரணம், வாஸ்து சாந்தி யாக பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, சண்டியாக பூஜைகள் நடைபெற்றது. இதில் 16 வகையான பழங்கள் மற்றும் 108 வகையான பூஜை பொருட்களை கொண்டு யாககுண்டத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சண்டி ஹோமம் நடந்தது.

மேலும், தம்பதியினர் பூஜை, சுமங்கலி பூஜை, கன்னி பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரம் கண்ணுடையாள் தீப, தூப ஆராதனைகள் நடந்தது. இதில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.