பற்களில் உள்ள மஞ்சள் கரையை போக்குவது எப்படி?

பற்கள் மனிதர்களின் அழகை மேலும் அதிகரிக்க செய்கின்றது. இவ்வாறான பற்களில் சில தருணம் மஞ்சள் கறைகள் ஏற்படுவதுண்டு.

இவற்றினை சரி செய்வதற்கு பணத்தினை செலவு செய்து மருத்துவர்களை பலரும் அணுகி வருகின்றனர்.

ஆனால் அவ்வாறு எந்தவொரு செலவும் இல்லாமல் வீட்டில் சில பொருட்களை வைத்து பற்களை பால் போன்று வெண்மையாக்கலாம்.

பொதுவாக பற்களை வெண்மையாக்குவதற்கு விற்கப்படும் பேஸ்ட்டுகளில் கார்பமைடு பெராக்ஸைடு மற்றும் சிறிய துகள்கள் பற்களின் எனாமலை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

பற்களை வெள்ளையாக்குவதற்கு ஓர் நேச்சுரல் டூத் பேஸ்ட்டும், அலுமினியத்தாளும் அவசியம்.

தேவையான பொருட்கள்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – சிறிது
அலுமினியத்தாள்
செய்யும் முறை
பேக்கிங் சோடா மற்றும் உப்பு இவற்றினை நன்றாக தண்ணீர் விட்டு கலந்து பேஸ்ட் போன்று உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை பற்களில் தடவிய பின்பு அலுமினியத்தாள் கொண்டு படத்தில் காட்டியுள்ளபடி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

1 மணிநேரம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இந்த முறையை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் செய்ய வேண்டாம்.