பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் மரணமடைந்த தகவல் திரையுலகினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள நடிகரான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
2016-ம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஏசியாநெட் காமெடி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், 61 வயதாகும் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் கொச்சியில் இன்று காலமானார்.
மேலும், அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.