சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும்.
பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு நிறத்திலும் வெளியேறும். இவை அதிகமாக வெளியேறினால் தீவிரமான பாதிப்பை உண்டாக்கும். உடல் பலவீனமடையும். எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும். சிலருக்கு மாதவிடாய் வரப்போகிறது என உணர்த்தும் விதமாக மாதவிடாய் நாட்கள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் வெள்ளைப்படும்.
இவ்வாறு வெளியேறும் வெள்ளை திரவத்தால் நோய்த்தொற்று உண்டாகும். இது வெஜினா பகுதியை சுகாதரமற்றதாக, சுத்தமற்றதாக மாற்றலாம். துர்நாற்றமும் வீசக்கூடும். அரிப்பை உண்டாக்கும். அசௌகரியமாக இருக்கும்.
இது தண்ணீர் போன்று வெளியேறினால் அது பெரிய பாதிப்பை உண்டாக்காது. இது பெண்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரும். கடின உழைப்பு, ஹெவி ஒர்க் அவுட், அதிக எடை தூக்குதல் போன்ற சமயத்திலும் வரும்.
உடல் கழிவும், வெஜினா தன்னை சுத்தம் செய்து அதன் கழிவையும் வெளியேற்றுவதே இந்த வெள்ளைப்படுதல். கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலோ, அதிகம் உணர்ச்சிவசப்படுதல், மன அழுத்தம், கவலைகள் என இருந்தாலும் அதிகம் வெள்ளைப்படும். கருத்தரித்தலின் போதும் அதிகம் வெள்ளைப்படும்.
எப்படியிருந்தாலும் இந்த வெள்ளைப்படுதல் என்பது உடலின் கழிவு என்பதால் அதை உடனே சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில் அது பாக்டீரியா தொற்றாக மாறலாம். இது தீவிரமாகும்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகவும் மாறலாம். இதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு வருடமும் மருத்துவரிடம் சுயபரிசோதனை செய்து கொள்வதால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும் என ஹெல்த் லைன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த சில வீட்டுக் குறிப்புகளும் பின்பற்றப்படுகிறது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர சரி செய்யலாம்.
தனியா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்துவர வெள்ளைப்படுதல் நீங்கும்.
கொய்யா இலைகளை கொதிக்க வைத்து குளிர்ந்தபிறகு குடிக்கலாம்