நாட்டில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உணவுப் பொதிகள் சுற்ற பயன்படுத்தப்படும் பொலித்தீன்கள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு தடை விதிக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், லங்கா சதொச நிறுவனத்தினால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கிடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மாற்றுச் சூழலுக்கு உகந்த உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.