இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!

எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறும் இல்லை என்றால், எரிபொருளுக்கு அறவிடப்படும் வரிகளை நீக்குமாறும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று தான் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன் கோரியுள்ள விலை திருத்தங்களை செய்தால், அது வரலாற்றில் மிகப் பெரிய விலை அதிகரிப்பதாக இருக்கும்.

இதனால், நுகர்வோரை அவதிக்கு உள்ளாகும் வகையிலான விலை அதிகரிப்பை மேற்கொள்ள தயாரில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கி வரும் நஷ்டத்திற்கு மத்தியில், எரிபொருள் விலை அதிகரிப்படுவது ஒரு நாள் தாமதமானாலும் அது கூட்டுத்தாபனத்தால், தாங்க முடியாத நஷ்டமாக இருக்கும் என கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் கூறுகின்றன.