சுவையான பருப்பு பொடி செய்வது எப்படி?

சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட சுவை அசத்தலாக இருக்கும். இன்று இந்த பருப்புப்பொடி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 1 கப்,

கடலைப்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 4,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.

மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.