நாகரிகம் மாறினாலும் பாட்டி கைமணத்தில் உணவுகள் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோருக்கு உண்டு. அவர்களுக்காக பாட்டி ஸ்டையில் சுவையான சிக்கன் எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையாவை:
நாட்டுக் கோழி – கால் கிலோ,
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு, பச்சை மஞ்சள் துண்டு – 1
மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் நாட்டு கோழியை கழுவி அவித்து வைத்து கொள்ளுங்கள். மஞ்சள் துண்டையும் மிளகையும் அரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் சிறிய மண் சட்டியை வைத்து அதில், எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் இரண்டையும் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் நாட்டுகோழியை அதில் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த விழுதை சேர்த்து கலக்கவும். 15 நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால் சுவையான நாட்டு கோழி பிரட்டல் தயார்.