சரிவடைந்த பங்குச்சந்தையால் நிறுத்தப்பட்ட பரிமாற்றங்கள்

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்கு பரிமாற்றங்கள் இன்று பிற்பகல் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 30 நிமிடங்களுக்கு பங்கு பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 குறியீடு 5 வீதத்திற்கும் மேல் சரிந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ​​அனைத்து பங்குகளின் விலை குறியீடுகள் 540.43 புள்ளிகளாகவும், S&P SL20 குறியீடுகள் 207.60 புள்ளிகளாகவும் சரிந்து காணப்பட்டன.