நாட்டில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாத்தளை – இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் இரத்தோட்டை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.