அதிரடி அறிவிப்பு…கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல ஹீரோ!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவின் புதிய தொகுப்பாளரை ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தோடு கமல் பிக் பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த வாரம் முதல் ஷோவுக்கு புது தொகுப்பாளர் யார் என்பது ரசிகர்கள் மனதில் கேள்வியாக இருந்தது. தற்போது ஹாட்ஸ்டார் ஒரு போஸ்டர் வெளியிட்டு இருக்கிறது.

புது தொகுப்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளிவரும் என தெரிவித்து உள்ளனர்.

அந்த போட்டோவில் திரும்பி நின்றிருப்பது சிம்பு தான் என தற்போது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சிம்பு ஷூட்டிங்கிற்காக தயாராகி கொண்டிருக்கும் போட்டோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஹாட்ஸ்டார் அடுத்த அப்டேட்டை கொடுத்திருக்கின்றது. முன்னதாக கமல் ரசிகர்கள் அதிகம் ஆதரவு கொடுத்த நிலையில் தற்போது சிம்பு ரசிகர்களின் கவனமும் பிக் பாஸ் திரும்பியுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல புதிய அறிவிப்பாளருடன் ப்ரோமசன் வேலையும் தானாக நடந்து விட்டது.