எக் ரைஸ் என்றாலே வீட்டில் அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கும்.
அதனை ரொம்ப ஈஸியாக செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை – 6 பீஸ்
பிரியாணி அரிசி – 1/4 கிலோ
முட்டை கோஸ் – 100 கிராம்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 2
மிளகுதூள் -1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை சின்ன கொத்து
கருவேப்பிலை சின்ன கொத்து
கேரட் – 100 கிராம்
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியை வேகவைத்து முக்கால் பதத்தில் சாதமாக வடித்து வைக்கவும். காய்கறிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
முட்டையை அடித்து மிளகுதூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முட்டை கலவையை தோசை போல ஊற்றி இருபுறம் வெந்ததும் சிறிய தூண்டுகளாக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி கேரட், முட்டை கோஸ், குடை மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேகவைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து இறுதியில் வேகவைத்த முட்டை துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறி, அப்படியே சில நிமிடங்கள் வைக்கவும். சாதம் மற்றும் அனைத்து பொருட்களும் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
இப்போது சுவையான எக் ரைஸ் ரெடி.