பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு (C.D. Wickramaratne) கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் செய்துக்கொண்ட பரிசோதனையின் பின்னர் அவருக்க தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பரிசோதனை செய்துக்கொள்வதற்கு முன்னர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று, சில பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.