அமெரிக்காவின் ஆலோசனையை புறக்கணிக்கும் உக்ரைன்

உக்ரைன் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறி விடுங்கள் என்ற அமெரிக்காவின் வேண்டுகோளை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா இன்று மூன்றாவது நாளாக போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனின் தலைநகர் கிளிவ்வை ரஷ்யா படைகள் இன்று கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு வேண்டுகோள் விடுத்து, அதற்கான உதவிகளையும் செய்துதர தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதற்கு “சண்டை இப்போது நடைபெற்று வருகிறது” எங்களுக்கு இப்போது பீரங்கிகளை எதிர்த்து தாக்க வெடிமருந்துகள் வேண்டும். அதற்கு மாறான “பயணங்கள் தேவையில்லை” என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக நிராகரித்ததாக அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்க பாதுகாப்பு படையினர் எதிர்பார்த்த வேகத்தை விடவும் குறைவான வேகத்திலேயே ரஷ்ய படைகள் முன்னேறிவருவதாகவும், இந்த நிலைமை விரைவில் மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட வீடியோ பதிவில், இன்றைய இரவு மிகவும் முக்கியம் வாய்ந்தது, நாம் அனைவரும் உறுதியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து நிற்கவேண்டும். உக்ரைனின் எதிர்காலம் இப்பொது தீர்மானிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.