ஜனாதிபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) சம்பளம் 90 ஆயிரம் ரூபாய் மாத்திரமே எனவும் அந்த சம்பளத்துடன் ஒப்பிடும் போது, தாதி சேவைக்கு அதனை விட வசதிகள் கிடைப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruttettuve Ananda Thera) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (26-02-2022) அலரி மாளிகையில் நடைபெற்ற புதிதாக 153 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொழில் அல்ல. இது சேவை. நீங்கள் செய்யும் சேவைக்கு கொடுப்பனவு, சம்பளம் வழங்கப்படுவது வேறு விடயம். எனினும் நாம் சிறந்த சேவையை நிறைவேற்றுவதற்காகவே தாதி சேவையில் இணைக்கின்றோம்.

ஜனாதிபதியின் சம்பளம் 90 ஆயிரம் ரூபாய். அதனை விட தாதியர்களுக்கு வசதிகள் கிடைக்கின்றன. வசதிகளை பெற்றுக்கொள்ளும் நாம் சில குறைப்பாடுகள் இருந்தாலும் முடிந்தளவுக்கு சிறப்பான சேவையை செய்ய வேண்டும்.

இந்த நிகழ்வுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வந்துள்ளனர். நினைவுப்படுத்தினால், எப்போது மறுக்க மாட்டார்கள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அண்மைய காலத்தில் இருந்து அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் எமக்கு செவிமடுக்கின்றார்.

இதுதான் தேவைப்படுகிறது. சில அமைச்சர்கள் இருந்தனர். பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்பதில்லை என்பது மட்டுமல்ல, கதவுகளை கூட திறப்பதில்லை. அப்படியான செயலாளர்கள் இருந்தனர். பணிப்பாளர்கள் இருந்தனர். தற்போதும் உள்ளனர். இல்லை கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.