சுவையான சாக்கோ கேக்… செய்வது எப்படி ?

பொதுவாக கேக் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால், பேக்கிரியில் தான் கேக் வாங்குவோம். தற்போது வீட்டிலேயே சுவையான சாக்கோ கேக் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

மைதா மாவு – 250 கிராம்

சர்க்கரை – 5 தேக்கரண்டி
கோகோ பவுடர் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 50 மில்லி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – ½ தேக்கரண்டி
பழுத்த வாழைப்பழம் – 2
காய்ச்சிய பால் – 4 தேக்கரண்டி
சாக்லேட் துண்டுகள் – தேவைக்கேற்ப
வினிகர் – 1 தேக்கரண்டி

செய்முறை:

வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சலித்து வாழைபழ கலவையில் சேர்க்கவும்.

இதில் பால் சேர்த்து சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும். கேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் ஊற்றவும்.

அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டு பொருத்தவும். கேக் கலவை இருக்கும் பாத்திரத்தை அதன் மேல் வைத்து, காற்று புகாதவாறு மூடி 30 நிமிடங்கள் வேகவைத்து ஆறவைக்கவும்.