சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் ராசிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றால் சிறுமியை கொலை செய்து விட்டு உறாவினர்களிடம் கூறி விட்டு தப்பிசென்றுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர். சிறுமியை காதல் திருமணம் செய்து கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.