இந்து மதத்தில், வழிபாட்டில் பல வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சந்தனமும் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனமானது திலகமிடுவதற்கு மட்டுமின்றி மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது. நாமும் சந்தன மாலைகளை அணிந்து கொள்ளலாம். சிவப்பு சந்தன மாலை, வெள்ளை சந்தன மாலை என இரண்டு மாலைகள் உள்ளன. அவற்றில் வெள்ளை சந்தன மாலையில் பலன்களை தெரிந்து கொள்வோம்.
அறிவு மற்றும் ஞானம்
வெள்ளை சந்தன மாலை அணிந்து கொண்டு காயத்ரி மந்திரங்களை உச்சரிப்பதால் எந்த விருப்பமும் விரைவில் நிறைவேறும். மேலும் மாணவர்கள் வெள்ளை சந்தன மாலை அணிந்து கொண்டால் அறிவும் ஞானமும் கிடைக்கும். தேர்வு மற்றும் அரசுப் பணிகளுக்கான பயிற்சி செய்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
மனம் அமைதி
வெள்ளை சந்தன மாலை அணிந்து கொள்வதால் மன அமைதி கிடைக்கும். இதனால் நேர்மறை ஆற்றல் நம்மில் பெருக்கெடுக்கும். அதுமட்டுமின்றி, மனம் கலங்கினாலோ அல்லது குழப்பமாக இருந்தாலோ, வெள்ளை சந்தன மாலையை அணிந்து வழிபட்டால், தெளிவு கிடைக்கும். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.
நிதி பிரச்சனைகளுக்கு தீர்வு
வெள்ளை சந்தன மாலை பணம் சம்பந்தமான பிரச்சனையை தீர்க்கும். ஏதேனும் பணப் பிரச்சனை இருந்தால், வெள்ளை சந்தனப் மாலையை அணிந்து கொண்டு ‘ஓம் ரண்முக்தேஷ்வர் மஹாதேவாய நம’ என்ற இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பணம் சார்ந்த சிக்கல்களில் இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
வெள்ளை சந்தன மாலையை எப்போது அணிய வேண்டும்?
வியாழக்கிழமை வெள்ளை சந்தன மாலை அணிந்து கொள்ள சிறந்த நாளாக கருதப்படுகிறது. அதை அணிய, காலையில் குளித்துவிட்டு, வழிபாட்டுத்தலத்தில் அமர வேண்டும். அதன் பிறகு, வெள்ளை சந்தன மாலைய அணிந்து மனமுருகி கடவுளை வேண்டும் போது நினைத்த காரியம் நிறைவேறும்.