சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் அதிகளவு இருக்கிறது.
கொழுப்பை கரைக்க விரும்பினால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி – அரை கிலோ
தேங்காய் – 1
தேங்காய் துருவல் – 2 கப்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
வெல்லம் – சிறிய துண்டு
தண்ணீர், உப்பு – சிறிதளவு
செய்முறை
சிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.
தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும். ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சட்டியை கையால் பிடித்து மாவை சுற்றி பரவ விட்டு மூடி வைக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி. சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும். தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்.