நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
“முழு நாட்டையும் சரியான பாதைக்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்த சக்தியாக செயற்படுவோம். அமெரிக்க பிரஜையின் அதிகார செயற்பாட்டிற்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.