தினமும் இரண்டு தடவை கிரீன் டீ குடிப்பதால் என்ன ஆகும் தெரியுமா?

குறைந்த நாட்களில் மிதமான எடைக் குறைப்புக்கு உதவும் பானங்களில் கிரீன் டீயும் ஒன்று.

இதில் உள்ள மூலக்கூறுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

கொழுப்பைக் கரைக்கும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும்.கிரீன் டீயின் உயர் தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

இனி தினமும் இரண்டு வேலை கிரீன் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
இதய நோய் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.