உங்களுக்காக சூப்பரான மீல்மேக்கர் கீமா ஸ்டஃப்டு தோசை..! செய்வது எப்படி .?

சிலருக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும். பலவகையான தோசைகள் இருக்கின்றன. சைவபிரியர்களுக்கு பிடித்த மீல்மேக்கர் கீமா ஸ்டஃப்டு தோசை எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

தோசை மாவு – 2 கப்,

எண்ணெய் – சிறிதளவு,
மீல்மேக்கர் – 100 கிராம்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப),
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

அரைக்க :

வெங்காயம் – 1/2 (நறுக்கியது),
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை – 5 இலை,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3

செய்முறை

மீல்மேக்கரை ஊறவைத்து அதனை அரைத்து கொள்ளவும். பின்னர் வெங்காயத்துடன், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து தனியே அரைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விழுதை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்த மீல்மேக்கர் சேர்த்து கிளறவும். உதிரி உதிரியாக வரும் போது இறக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி அதன் மீது மீல்மேக்கர் கைமா கலவையினை மேலே கவலையை வைத்து நன்றாக பரப்பி விட்டு சுற்றில் எண்ணெய் விட்டு பரிமாறவும். வெந்ததும் அதனை மடித்து பரிமாறலாம்.