உக்ரைனில் “கொடூரமான நிலை வரப்போகிறது” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) நடந்த 90 நிமிட தொலைபேசி உரையாடலுக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) கூறியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் அதிபரின் பெயர் குறிப்பிடப்படாத உதவியாளர்,
விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் முழுவதையும் கைப்பற்றும் நோக்கத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அவரிடம் பேசியதின் அடிப்படையில், உக்ரைனில் மோசமான நிலை வரப்போகிறது என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எங்களிடம் கூறியதில் எங்களுக்கு உறுதியளிக்கும் வகையில் எதுவும் இல்லை. உக்ரைனை ‘டி -நாசிஃபை’ செய்யும் தனது நடவடிக்கையை இறுதிவரை மேற்கொள்வதில் அவர் உறுதியாக உள்ளதாக சொன்னார் ” என்று கூறினார்.
மேலும், “பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், மனிதாபிமான அணுகலை அனுமதிக்கவும் என ரஷ்ய அதிபரிடம் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் வலியுறுத்தினார். தான் இதற்கு ஆதரவாக இருப்பதாக விளாடிமிர் புடின் பதிலளித்தார்.
இருப்பினும், எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள குடிமக்களின் கட்டமைப்பை குறிவைப்பதையும் ரஷ்ய அதிபர் மறுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் மிகவும் சமநிலையுடனும் மற்றும் மிகவும் தெளிவான ரீதியாகவும் பேசும் முறையைக் கொண்டுள்ளார்.
அவர் சில நேரங்களில் பொறுமையின்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறார், ஆனால் அடிப்படையான வார்த்தை பரிமாற்றங்களின் போது பதற்றத்தின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று கூறினார்.