உக்ரைனின் கோரிக்கை நேட்டோவால் நிராகரிப்பு… வெளியான தகவல்!

தமது வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக நேட்டோ அமைப்பின் தலைவர் ஸ்டோலன்பெர்க் கூறுகையில்,

வான்பரப்பில் பறக்கத்தடை நடைமுறையை நடைமுறைப்படுத்த ஒரேஒரு வழி மட்டுமே உள்ளது.

அது என்னனென்றால் நேட்டோ போர் விமானங்களை உக்ரைன் வான் எல்லைக்குள் அனுப்பி ரஷ்ய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி ‘விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிப்பது தான்.

நாம் அதை செய்தால் அது அதிக நாடுகளை உள்ளடக்கி, பெருமளவு மனித இழப்புகளை ஏற்படுத்தி ஐரோப்பாவை முழுமையான போருக்கு கொண்டு செல்லும்’ எனக் கூறியுள்ளார்.

தங்கள் கோரிக்கையை நேட்டோ ஏற்று உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத்தடை என அறிவித்தால், ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும்.

மேலும், இந்தத் தடையை மீறிய எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம் என உக்ரைன் அதிபர் கூறியிருந்த நிலையில், நேட்டோ இதனை மறுத்துள்ளது.