உக்ரைனுக்குள் நுழையுமா நேட்டோ படைகள்?

உக்ரைனில் நிலைமை கொடூரமாக இருப்பதாக நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.

பிரசல்ஸ் நகரில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், நேட்டோ படைகள் வான் வழியாகவோ, நிலம் வழியாகவோ உக்ரைனுக்குள் நுழையாது என தெரிவித்தார்.

உக்ரைன் வான் பரப்பில் நோ – ஃப்ளை -சோன் (வான் பரப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பு நேட்டோவால் வெளியிடப்பட்டால், அதை மீறிப் பறக்கும் ரஷ்யப் போர் விமானங்களை நேட்டோ ஜெட் விமானங்கள் சுட வேண்டி வரும்.

இதனால் உடனடியாக மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக மேற்கத்திய ஆட்சியாளர்களை மேற்கோள்காட்டி போரியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.