பிரியங்கா சோப்ராவா இது ?

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர், இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ’அன்ஃபினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா – நிக் ஜோடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் குழந்தை பற்றிய எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா லாஸ் ஏஞ்சல்ஸில் ஷாப்பிங்கிற்காக வெளியில் வந்திருக்கிறார். அந்த போட்டோவை ஒரு பத்திரிகையாளர் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். பிரியங்கா சற்று குண்டாகி இருப்பது போன்று இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.