விமல், கம்மன்பில தொடர்பில் பிரதமர் பிறப்பித்துள்ள உத்தரவு!

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல், வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்குத் தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை சமமாக அவர்களுக்கும் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொதுவாக இரண்டு பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனினும், அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கான பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.

இந்நிலையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்திருந்தனர்.

அதற்கமைய அவர்களின் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் எனவும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.