யாழ், மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரி ஒருவரையும் பொலிஸார் தாக்கியதில் அவர்கள் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த பிரதேச சபை உறுப்பினரின் தாய், தந்தை மற்றுமொறு சகோதரி ஆகியோரை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து நீதவான் அவர்களை ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளார்.