இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி டிமித்ரோ குலேபா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இது தொடர்பாக கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
” உக்ரைன் நாட்டில் ஆசியா , ஆபிரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்க பெரும் உதவியாக இருந்துள்ளோம்.
வெளி நாட்டு மாணவர்களை நாங்கள் பத்திரமாக வெளியேற்ற சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இன்னும் பத்திரமாக மீட்க ரஷ்யா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
தற்போது போரில் வெற்றி பெற்றதாக காட்டிக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கிறது. ஆனால், நாங்கள் எங்கள் மண்ணை காப்பாற்றவே போராடுகிறோம்.
இந்தியா, சீனா , நைஜீரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்தக் கேட்க வேண்டும். தற்போதைய போரை யாரும் விரும்பவில்லை என ரஷ்ய அதிபர் புதினிடம் பேச வேண்டும்” என்றார்.