சிம்பு அவ்ளோ சொல்லியும்.. நோ யூஸ்.. கொஞ்சம் கூட மதிக்காத போட்டியாளர்கள்.! வெளியான வீடியோ..!!

பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது.

போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நிரூப், ஜூலி, அபிராமி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, தாமரைச்செல்வி, அனிதா சம்பத், சினேகன் மற்றும் ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் தற்போது வீட்டில் இருகின்றனர். நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் நுழைந்துள்ளனர்.

கமல் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததனை தொடர்ந்து அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் நேற்று சிம்பு போட்டியாளர்கள் சரிவர டாஸ்க்குகளை செய்யவில்லை என்று கடுமையாக திட்டினார்.

இந்த நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், அப்போதும் சண்டை போட்டுக்கொண்டு சரியாக செய்யாமல் இருக்கின்றனர். இதற்கான புரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.