பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த இரு வாரங்களாக அவர் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கு வருகிறார். கடந்த வாரம் நடந்த டாஸ்கில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை என சொல்லி சிம்பு நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களை கண்டித்து இருக்கிறார்.
சிம்பு ரசிகர் என சொல்லிக்கொண்ட பாலாஜி விஷயத்திற்காக பாராட்டிய சிம்பு மற்றொரு விஷயத்திற்காக திட்டினார். என் ரசிகன் என சொல்லி மற்றவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தது எனக்கு பிடித்திருந்தது என பாலாஜியை பாராட்டினார் சிம்பு.
“எஸ்டிஆர் ஃபேன் ஆக இருந்தால் பிராதுக்கு பயப்பட கூடாது. நாம எவ்ளோ தாண்டி வந்திருக்கோம். அதையும் நாம் அப்படி தானே எடுத்துக்கணும்” என பாலாஜி முருகதாஸை கண்டித்தார் அவர்.
மேலும் டாஸ்க்கை யாரும் சீரியஸாக எடுத்துக்கொண்டு விளையாடுவதில்லை என்றும் சிம்பு அனைத்து போட்டியாளர்களை கண்டித்து இருக்கிறார்.