ஆண்ட்ராய்டு போன்களை விட பலருக்கும் ஐபோன் என்றால் அதீத பிரியம் இருக்கும். எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பார்கள்.
அந்த அளவிற்கு ஐபோன் செயல்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும். அந்த வகையில் ஐபோன் வைத்திருப்பவர்கள் ஐபோனுக்குள் மறைந்திருக்கும் ஷார்ட் கட் வசதிகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆப்பிள் ஐபோன் உங்களின் அன்றாடச் செயல்பாட்டில் உங்களுக்குப் பலனளிக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. பலருக்கும் அறியாத ஒன்று ஐபோனுக்கு பின்புறம் உள்ள ஆப்பிள் லோகோ வெறும் லோகோ மட்டும் என நினைப்பது. அது வெறும் லோகோ மட்டும் கிடையாது அதுக்கும் மேல, ஆப்பிள் லோகோவை இரண்டு அல்லது மூன்று முறை தட்டினால் ஹோம் ஸ்கீரினை ஓபன் செய்வது, டார்ச், ஆக்டிவ் சிரி என பல அம்சங்களை அணுக முடியும்.
அடுத்ததாக ஐபோனில் இருக்கும் வசதியிலேயே மிகவும் பயனுள்ளது என்றால் அது ஆவணங்களை ஸ்கேன் செய்வது ஆகும். இந்த வசதி மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்வதோடு மட்டுமின்றி, கோப்பை சேமிக்கும் முன்பு ரொட்டேட், கிராப், டிசைன் போன்ற பல விஷயங்களை செய்யலாம். ஆவணத்தை PDF வடிவத்தில் சேமிப்பதற்கான ஆப்ஷனும் உள்ளது.
iPhone மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா என்பதை அறிந்து கொள்ள இந்த அம்சத்தை செயல்படுத்த எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் (Setting) க்ளிக் செய்து, அதற்குள் பிரைவசி என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் லோகேஷன் சர்வீஸ் என்பதில் உள்ள Frequent Location என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களை யாராவது கண்காணிக்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ளலாம்.
போன், மெசெஜ், நோட்டிபிகேஷ்ன் போன்ற பலவகையான அறிவிப்புகளுக்கு தனித்தனியாக வைஃப்ரேஷன்களை செட் செய்து கொள்ளலாம். இதற்கும் குறிப்பிட்ட அறிவிப்பை தேர்வு செய்து, அதில் எடிட் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதிலிருந்து குறிப்பிட்ட அறிவிப்பிற்கான தனிப்பயனாக்கப்பட்ட அதிர்வுகளை உருவாக்கலாம்.
அடுத்து ஐபோனில் திறந்திருக்கும் ஆப்களை விரைவாக மூடவும், அணுகவும் இந்த வசதி பயன்படுகிறது. இதற்கு உங்களுடைய ஐபோனின் ஹோம் ஸ்கிரீனில் இடது விளிம்பில் அழுத்தி, உங்கள் விரலை திரையின் வலது பக்கமாக நகர்த்தவும். இது நீங்கள் பயன்படுத்தாத பயன்பாட்டிலிருந்து விரைவாக வெளியேற உதவும்.
முக்கியமாக ஐபோனில் திறந்திருக்கும் ஆப்களை விரைவாக மூடவும், அணுகவும் இந்த வசதி பயன்படுகிறது. இதற்கு உங்களுடைய ஐபோனின் ஹோம் ஸ்கிரீனில் இடது விளிம்பில் அழுத்தி, உங்கள் விரலை திரையின் வலது பக்கமாக நகர்த்தவும். இது நீங்கள் பயன்படுத்தாத பயன்பாட்டிலிருந்து விரைவாக வெளியேற உதவும்.