ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில்…காரணம் என்ன ??

விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக வலம்வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தனது வேலை விடயமாக மும்பை சென்ற இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினார்.

ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் காதல் பாடலின் வீடியோ நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தினை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பது, காய்ச்சல், வெர்டிகோவால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். ஆனால் இன்ஸ்பையரிங்கான டாக்டர் உங்களை வந்து சந்தித்தால் மருத்துவமனை அனுபவம் மோசம் இல்லை. உங்களை சந்தித்ததன் மூலம் மகளிர் தினம் நன்றாக துவங்கியிருக்கிறது. கவுரவம் மேடம் என தெரிவித்துள்ளார்.

கை நிறைய பிளாஸ்டர் இருந்தாலும் சிரித்த முகமாக இருக்கும் ஐஸ்வர்யாவை அவதானித்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஐஸ்வர்யா விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் பிரார்த்தனை செய்வதாகவும், உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.