மார்ச் 21 அன்று ரிஷப ராசியில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மேஷ ராசியில் இருக்கும் கார்த்திகை 1ம் பாதத்திற்கு ராகுவும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருக்கும் விசாகம் 4ம் பாதத்திலிருந்து, துலாம் ராசியில் இருக்கும் விசாக நட்சத்திர 3ம் பாதத்திற்கு மாற உள்ளார்.
அதோடு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் இந்த ராகு – கேது பெயர்ச்சி நிகழ்வதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பெயர்ச்சியின் போது ராகு உங்கள் ஜென்ம ராசியிலிருந்து 12ம் இடத்திற்கும், கேது பகவான் 7ம் இடத்திலிருந்து 6ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆக உள்ளனர்.
2022ல் நிகழ உள்ள இந்த ராகு – கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு ராகுவினால் ஏற்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடக்கூடியதாகவும், நல்ல மாற்றங்களும், அருமையான பலன்கள் இனி பெறுவீர்கள்.
நன்மைகள்
வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.
நிதிநிலையில் என்ன தான் பிரச்னை ஏற்பட்டாலும் அதை சிறப்பாக சமாளிக்கக்கூடிய திறமை ரிஷப ராசியினரிடம் உள்ளது.
வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல அடிக்கடி வாய்ப்புள்ளது. வெளிநாடு தொடர்பான நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குச் சாதகமான காலமாக இருக்கும்.
வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனவர்களின் கனவு நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஒரே ஒரு வருமான வாய்ப்பை நம்பி இல்லாமல், இரண்டு மூன்று வருமான வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு வேலையோடு வேறு சில சிறு வேலைகளை செய்து வருமானம் ஈட்டுவீர்கள்.
புதிதாக வேலை தேடக்கூடியவர்களுக்கு விரும்பிய வகையில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு; சேவைத் துறை சார்ந்த வேலை, தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்
குல தெய்வ வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். மகாலட்சுமி வழிபாடு செய்வதும், எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன் விநாயகர் வழிபாடு செய்வது மிக நல்ல பலனை தரும்.