மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள்.
அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்.
வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
மாதுளையின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பாக குடித்து வந்தால் அது இரவில் கல்லீரலின் செயல்பாடை சீராக வைத்திருக்கும்.
கல்லீரல் கொழுப்புகளையும் கரைக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இனியாவது மாதுளையை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசாமல் அதன் முழு மருத்துவ குணங்களையும் உடலுக்குக் கொடுங்கள்.