டாப் நடிகருடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ருதி ஹாசன்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இவர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது சலார் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

 

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி கமிட்டாகியுள்ளார்.

அந்த அறிவிப்பு, ஸ்ருதி ஹாசன் மற்றும் சிரஞ்சீவி இணைந்திருக்கும் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.